பணம் தரவில்லை என தாய் கொன்ற மகன்., விருதுநகரில் பரபரப்பு..!! - Seithipunal
Seithipunal


பணம் கொடுக்க வில்லை என மகனே தாயை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் , மல்லாங்கிணறு  பகுதியில் வசித்து வருபவர் களஞ்சியம் (55). இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகனுக்கு திருமணமான நிலையில், இரண்டாவது மகன் ஹரிஹரன்  தாயுடன் வசித்து வந்தார்.

ஹரிஹரனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால் அவர் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவதன்று அதிகாலை வரை டிவி பார்த்து கொண்டிருந்துள்ளார்.

இதனை கண்ட அவரது தாய் களஞ்சியம் டிவியை அணைத்து விட்டு தூங்குமாறு கூறவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அண்ணனுக்கு மட்டும் இடத்தை விற்று பணம் கொடுத்துள்ளாய் அதே போல எனக்கும் தா என அவர் கேட்டுள்ளார்.

இதற்கு களஞ்சியம் மறுக்கவே அவர் முகத்தில் துணியை வைத்து அழுத்தி கொலை செய்துவிட்டு போததற்கு கம்பியால் கழுத்தில் குத்தியுள்ளார்.

விடிந்து நீண்ட நேரமாகியும் அவர் வெளியில் வராததால்  சந்தேகமடைந்த அக்கம்பக்கதினர் அங்கு சென்று பார்த்த போது அவர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை அடுத்து அவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ஹரிகரனை அகிது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Son arrested for killing his mother


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal