வாணியம்பாடி அருகே 65 லட்சம் பணம் பறிமுதல்.! தீவிரம் காட்டும் தேர்தல் படை.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அடுத்த நாயக்கனூர் மலைச்சாலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அந்தக் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ஏ.டி.எம் மெஷினில் நிரப்புவதற்காக 31 லட்சம் ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.

 

உடனே அந்த பணத்தை பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதனை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதேபோன்று ஏ.டி.எம் மெஷினில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட 34 லட்சம் ரூபாய் மற்றும் ஆலங்காயம் - ஆசனாம்பட்டு சாலையில் அஜித் குமார் என்பவர் இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற 90,700 ரூபாய் பணத்தையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கும் ES, MS CODE- ல் வித்தியாசம் இருந்ததால் 65 லட்சத்து 90 ஆயிரத்து 700 ரூபாயை மாவட்ட தேர்தல் அலுவலர், வாணியம்பாடி கருவூலத்தில் ஒப்படைத்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sixty five lakhs money seized in vaniyambadi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->