புதுக்கோட்டையில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் வெடி விபத்து - 6 பேர் படுகாயம்.!
six peoples injured for country firecracker making workshop in putukotai
புதுக்கோட்டையில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறையில் வெடி விபத்து - 6 பேர் படுகாயம்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வெள்ளனூர் அருகே பூங்கொடி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நாட்டு வெடி தயாரிக்கும் பட்டறை செயல்பட்டு வந்தது. இந்த நிலையில், இந்த பட்டறையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் ஆலை உரிமையாளர் உட்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அந்தத் தகவலின் படி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைவாக வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்து படுகாயமடைந்தவர்களை மீட்டனர்.
தற்போது அவர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கிடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
six peoples injured for country firecracker making workshop in putukotai