குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் ஏன் அமைக்க வேண்டும் - சிவன் விளக்கம்.!  - Seithipunal
Seithipunal


குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க தேர்வு செய்யப்பட்டது எதனால் என்பது குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் விளக்கமளித்து இருக்கின்றார்.

ஏற்கனவே 2 ராக்கெட் ஏவுதளங்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கின்றது. மேலும், ஒரு ஏவுதளம் அமைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அதற்கான இடத்தை தேர்வு செய்து இருக்கின்றனர்.

இதற்கு காரணம் என்னவென்பது குறித்து சிவன், "ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் கையகப்படுத்தும் வேலையானது துவங்கியிருக்கிறது. தெற்கு நோக்கி ராக்கெட் ஏவ வேண்டும் என்றால், ஏவுதளம் தமிழகத்தின் மையப்பகுதியில் மற்றும் கடற் பகுதியில் இருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.

Image result for SIVAN SEITHIPUNAL

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நேராக தெற்கு நோக்கி ராக்கெட்டை இயக்க முடியவில்லை என்பதால் குலசேகரப்பட்டினம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது." என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முக்கிய காரணம் நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் இருக்கும் திரவ உந்துவிசை அமைப்புகள் மையம் தான் என்றும், இந்த ஏவுதளமானது ஸ்ரீஹரிகோட்டாவில் விட சிறியதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

SIVAN EXPLAIN ABOUT WHY WE CHOOSING KULASEKARAPATINAM


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->