சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறையா? ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!!
Sivagangai Collector said principles can decide heavy rain holiday
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் தென்மேற்கு பருவமழை விலகி உள்ளதாலும், தமிழகத்தின் மேல் நிலவும் கீழ் அடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சென்னையிலும் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.

இந்த நிலையில் இன்று காலையில் முதல் திண்டுக்கல், கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் இன்று ஒரு நாள் மட்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே சிவகங்கை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன மழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தான் சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
அதேபோன்று கல்லூரி நிறுவனங்களும் விடுமுறை அளிப்பது தொடர்பாக முடிவு எடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ள நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Sivagangai Collector said principles can decide heavy rain holiday