இனிமே ரஸ்க்கை எப்படிடா சாப்பிடுறது.. வடமாநிலத்தானின் மனசாட்சியில்லா செயல்.. பிழைக்க வந்து பழி..! - Seithipunal
Seithipunal


தரமற்ற முறையில் தயார் செய்யப்பட்ட ரஸ்க் கம்பெனியை இழுத்து மூடி அதிகாரிகள் சீல் வைத்த அதிகாரிகள், வடமாநில கும்பலை சார்ந்தவனை கைது செய்யும் வரை தமிழகம் முழுவதும் சோதனைகள் தொடரும் என தெரிவித்துள்ளனர். 

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் உள்ள பெருமை வாய்ந்த செட்டிநாடு உணவகத்தில் ஒன்றாக இருப்பது காரைக்குடி பிரியா மெஸ். காரைக்குடிக்கு சென்று வரும் நபர்கள் தவறாமல் இங்கு செல்வார்கள் என்று கூறப்படும் நிலையில், அங்கிருந்து கெட்டுப்போன இறைச்சி, பழைய சிக்கன், மீந்துபோன பரோட்டா, பிரீசரில் வைக்கப்பட்டு இருந்த பழைய மைதா மாவு போன்ற உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு ஒரு வீடியோ வந்துள்ளது. இந்த வீடியோவில், குழந்தைகளும், வயோதிகர்களும் விரும்பி சாப்பிடும் உணவாக இருக்கும் ரஸ்க்கை வடமாநில தொழிலாளி என்ற வன்ம விரோதி பேக்கிங் செய்யும் ரஸ்க்கை எச்சில் செய்து பேக் செய்வது போன்றும், காலால் மிதித்து பேக் செய்தது போன்றும் காட்சிகள் பதிவாகியுள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காரைக்குடி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், காரைக்குடி சுற்றுவட்டாரத்தில் 10 க்கும் மேற்பட்ட ரஸ்க் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருவதையும், அதில் வடமாநில தொழிலாளர்கள் அதிகளவு வேலை செய்கிறார்கள் என்பதையும் அறிந்துள்ளனர். இதனையடுத்து, சார்லஸ் அமுல் ரஸ்க் பேக்டரி என்ற நிறுவனத்திற்கு சென்ற அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியாக ரஸ்க் தரையில் கொட்டி பேக்கிங் செய்யப்பட்டு வருவது தெரியவந்தது. 

மேலும், சுகாதாரம் இல்லாமல் அங்குள்ள தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த 250 கிலோ ரஸ்க் பறிமுதல் செய்யப்பட்டு குப்பையில் போடப்பட்டது. அங்கு பணியாற்றி வந்த பலரும் தடுப்பூசி செலுத்தாமல் பணிக்கு வந்ததால் அதிர்ந்துபோன அதிகாரிகள் நிறுவனத்திற்கு சீல் வைத்துவிட்டு சென்றனர். இதுமட்டுமல்லாது, ரஸ்க்கை பேக்கிங் செய்யும் போது அதனை எச்சில் செய்து பேக்கிங் செய்வது போன்று வீடியோ வெளியிட்ட ஆசாமி கைதாகும் வரை தமிழகமெங்கும் சோதனைகள் தொடரும் என தெரிவிக்கின்றனர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Karaikudi Rusk Company North Indian Employee Lick and Pack Video Goes viral


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->