கட்டணம் செலுத்தாமல் படிப்பது மனதை உறுத்துகிறது.. செல்போனால் கண்கள் பார்வை குறைகிறது.. விபரீத முடிவெடுத்த சிவகங்கை மாணவி.!! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருபுவனம் செல்லபனேந்தல் பகுதியை சார்ந்தவர் சத்தியமூர்த்தி. இவரது மகள் சுபிக்ஷா. இவர் மதுரை காமராஜர் சாலையில் இருக்கும் அரசு உதவி பெரும் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவர் பள்ளியிலேயே சிறந்த மாணவியாகவும், பல தனித்திறமை கொண்ட பெண்மணியாகவும் திகழ்ந்துள்ளார். 

மேலும், இணைய வகுப்புகள் துவங்கிய காலத்தில் இருந்து, சுபிக்ஷா வாட்சாப் குழு அட்மினாக நியமனம் செய்யப்பட்டு, பிற மாணவிகளுக்கு படங்களை பகிர்வது மற்றும் பாடம் தொடர்பான அறிவிப்பை தருவது என்று பல பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார்.

சுபிக்ஷாவின் தந்தை துபாயில் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில், கொரோனா காரணமாக சுபிக்ஷாவின் தந்தை சத்தியமூர்த்தி நாடு திருப்பியுள்ளார். இந்நிலையில், அலைபேசியில் பாடங்கள் படிக்க இயலவில்லை என்றும், இதனால் கண் பிரச்சனை ஏற்படுகிறது என்றும், தொலைக்காட்சி ஒன்றினை வாங்கி தருமாறும் கூறியுள்ளார். 

ஏற்கனவே பள்ளி கட்டணமாக ரூ.7 ஆயிரம் செலுத்தவேண்டிய சூழலில், ரூ.3 ஆயிரம் புத்தகங்கள் வாங்க செலவாகியுள்ளது. தினசரி பாடங்கள் சுமையாக அதிகரிக்க, விரக்தியில் இருந்த மாணவி தனது நிலையை ஆசிரியரிடம் கூறியுள்ளார். அவரது நிலையை புரிந்துகொண்ட ஆசிரியரும் பொறுமையாக வகுப்புகளில் கலந்து கொள்ளலாம் ஒன்று பிரச்சனை இல்லை என்று ஆறுதல் கூறியுள்ளார். 

ஆனால், பள்ளியில் கட்டணம் கட்டாமலேயே பயின்று வந்தது அவருக்கு குற்ற உணர்ச்சியை ஏற்படுத்தவே, வீட்டில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு பிணமாக தொங்கியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga girl student suicide due to late of fees give to School


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->