கார்த்திக் சிதம்பரம் முன்னிலையில் அடித்துக்கொண்டு ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


தேவகோட்டையில் நடந்த காங்கிரஸ் கட்சி கூட்டத்தில், கார்த்திக் சிதம்பரம் எம்.பி முன்னிலையில் கட்சியினர் ரகளையில் ஈடுபட்டு அடிதடி சம்பவம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டையில் ஊராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மாவட்ட அளவிலான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், காரைக்குடி எம்.எல்.ஏ எஸ். மாங்குடி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், தேவகோட்டை முன்னாள் நகரமன்ற தலைவர் ஆறுச்சாமி என்பவரின் ஆதரவாளர்கள், நாங்கள் கட்சிக்காக பல வருடம் உழைக்கிறோம்., ஒரு கூட்டம் என்றால் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று குற்றச்சாட்டை முன் வைத்தனர். 

இதனால் இருதரப்பு இடையே வாக்குவாதம் எழுந்து கைகலப்பாகவே, அறையில் இருந்த நாற்காலிகளை தூக்கி அடிக்க தொடங்கியுள்ளனர். இதனையடுத்து, கார்த்திக் சிதம்பரம் அங்கிருந்து புறப்பட்டு செல்ல, காரைக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரமேஷுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், ரகளையில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினரை அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தியதை அடுத்து, அனைவரும் அங்கிருந்து அமைதியாக புறப்பட்டு சென்றார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivaganga Devakottai Congress Workers Fight at Party Meeting In front of Karthick Chidambaram MP


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal