நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தலைமை செயலகம் முன்பு கோஷமிட்ட பாடகர் 'தெருக்குரல்' அறிவு; கைது செய்த காவல்துறை..! - Seithipunal
Seithipunal


பாடகர் 'தெருக்குரல்' அறிவு நெட் தேர்வுக்கு எதிராக தலைமை செயலகம் முன்பு கோஷமிட்டதால் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

நீட் யுஜி தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதற்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகி கோரி, சமூகவலைத்தளத்தில் உருவாக்கப்பட்ட காக்ரோச் ஜனதா பார்டி சார்பாக நேற்று டெல்லியில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.  

அவர்களை பாராளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தும்போது, காவல்துறையினரின் தடுப்பை அத்துமீறி நுழைந்ததால் காவல்துறையினர் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டு வீசியும் தடுத்தனர். இதில் பல மாணவர்கள் காவல்துறையினரால் தாக்குதலுக்கு உள்ளாகினர்.  அதேப்போன்று போராட்டக்காரர்கள் பொது சொத்துக்களுக்கு கார்களை கொண்டு வீசி சேதம் விளைவித்ததோடு, போலீசாரையும் தாக்கிய வீடியோக்கள் வைரலாகியுள்ளது.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராகவும், மத்திய அமைச்சர் பதவி விலக கோரியும், போராட்டங்கள் வெடித்துள்ளன.

அதன்படி, தற்போது தமிழகத்தில் சென்னை தலைமைச் செயலகம் முன்பாக ராப் பாடகர் அறிவு, நீட் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டத்தில் ஈடுப்பட்டார். அங்கு நான்கு பேருடன் வந்து கோஷமிட்டதால் காவல்துறையினர் பாடகர் அறிவு உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.  இதையடுத்து அவரை காவல்துறையினர் அங்கிருந்து கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Singer Therukkural Arivu who shouted slogans in front of the Secretariat demanding the cancellation of NEET exam arrested


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->