திடுக்கிடும் தகவல்! வேன்மீது ரெயில் மோத இதுதான் காரணமா?
Shocking information Is this reason why train hit van
கடலூர் மாவட்டத்தில் செம்மங்குப்பத்தில் இன்டர்லாக்கிங் அமைப்பு இல்லாததே இந்த விபத்துக்கு காரணம் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.அங்கு சிக்னலால் கட்டுப்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அமைப்பே 'இன்டர்லாக்கிங்' எனப்படும்.

ரெயில்வே கேட் திறந்திருந்தால் 1 கி.மீ முன்னதாக இருக்கும் சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்.இந்த சிக்னலைப் பார்த்து ஓட்டுநர் ரெயிலை நிறுத்திவிடுவார் என்பதால் விபத்துகள் தவிர்க்கப்படும்.
ஆனால், செம்மங்குப்பம் கேட்டில் இன்டர்லாக்கிங் இல்லாததால் கேட் திறந்திருந்ததை ஓட்டுநரால் அறிய முடியவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே,விபத்துக்குள்ளான பள்ளி வேனில் அடுத்த நிறுத்தத்தில் ஏற வேண்டிய பள்ளி மாணவன் 'ஆர்யா' நிருபர்களிடம் தெரிவிக்கையில்,"ரெயில் கேட் திறந்திருந்ததை பார்த்தேன். வேன் ஓட்டுநர் மீது எந்த தவறும் கிடையாது. கேட் கீப்பர் தான் உறங்கிவிட்டார்' என்று தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ரெயில் விபத்துக்கு கேட் கீப்பரும், ரெயில்வேதுறையில் நிகழும் குறைபாடுகளுமே காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.
English Summary
Shocking information Is this reason why train hit van