ஆந்திராவில் இருந்து கடத்தல்.! ரூ.40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகள் பறிமுதல்..! - Seithipunal
Seithipunal


ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஆந்திர பிரதேசம் மாநிலம் சித்தூரில் இருந்து திருவள்ளூர் பொதட்டூர் பேட்டை வழியாக காரில் செம்மர கட்டைகள் கடத்தி வரப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து பொதட்டூர்பேட்டை காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அவ்வழியாக வந்த கார் ஒன்று போலீசாரை கண்டவுடன், வேகமாக சென்றுள்ளது. இதையடுத்து போலீசார், காரை விரட்டிச் சென்றதில் காரில் இருந்த மர்ம நபர்கள், மலைப்பகுதியில் காரை நிறுத்தி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் காரில் சோதனை மேற்கொண்டதில், 10 செம்மரக்கட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் ரூபாய் 40 லட்சம் மதிப்பிலான பத்து செம்மரக்கட்டைகள் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, செம்மரக்கட்டைகள் கடத்தி வந்து மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sheep blocks worth Rs 40 lakh smuggled from Andhra have been seized


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal