விஜயகாந்தை அண்ணன் என்று கூப்பிட்ட விவகாரம் - சண்முக பாண்டியன் சொன்ன பரபரப்பு பதில்.!!
shanmugapandian answer vijay call brother to vijayakant issue
தவெக-வின் 2 மாநாடு நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய விஜய் தேமுதிக கட்சியின் நிறுவனர் விஜயகாந்தை , அண்ணன் என அழைத்திருந்தார். இந்த நிலையில், விஜய் கேப்டனை அண்ணன் என்று அழைத்து குறித்து விஜயகாந்தின் இளைய மகனும் நடிகருமான சண்முக பாண்டியன் சில கருத்துகளை தெரிவித்தார்.
விஜய்காந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் படம் சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தை சண்முக பாண்டியன் திரையரங்குக்கு வந்து பார்த்தார். அதன் பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் நேற்றைய தவெக மாநாட்டில் விஜயகாந்த் குறித்த விஜய் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், ''விஜய்க்கு அப்பா அண்ணன், அதனால் அண்ணன் என்று சொன்னார். அவ்வளவுதான். இதில் பெரிதாக பார்க்க எதுவும் இல்லை. அப்பா விஜய்யை சின்ன வயதிலிருந்தே பார்த்திருக்கிறார். விஜய் அப்பாவை அண்ணன் என்று கூப்பிட்டு பழகி விட்டார். அதனால் அப்படி அழைத்தார். அப்பா எப்போதும் மக்கள் சொத்துதான்'' என்றுத் தெரிவித்தார்.
English Summary
shanmugapandian answer vijay call brother to vijayakant issue