மாணவிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்….! இவங்களை எல்லாம் நம்பி, எப்படிய்யா பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்புறது?

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தும்மச்சன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேஸ் (வயது 37). இவர் இந்தப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், உடற்கல்வி ஆசிரியராகப் பணி புரிந்து வருகிறார்.
விளையாட்டு பீரியடுகளில், விளையாட வரும், பள்ளி மாணவிகளுக்கு, பயிற்சி அளிப்பது போல, அவர்களை ஆங்காங்கே தொட்டு, அடிக்கடி சில்மிசத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். சில மாணவிகளை, தன் அறைக்கு வரவழைத்து, அவர்களிடம் நைசாகப் பேசி, அவர்களுக்கு தொடர்ந்து செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
இதனால், மாணவிகள், இந்த உடற் பயிற்சி ஆசிரியரின் செய்கையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆனாலும், ராஜேஸின் இந்த டார்ச்சர் தொடர்ந்திருக்கிறது. இதனால், பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும், ஒன்று சேர்ந்து இந்த விஷயத்தை, பள்ளி முதல்வரிடம் தெரிவித்தனர்.
அவர், அந்த உடற்பயிற்சி ஆசிரியரைக் கூப்பிட்டு, கண்டித்துள்ளார். அத்துடன் நில்லாமல், ஒட்டன்சத்திரம், மகளிர் காவல் நிலையத்தில், ராஜேசுக்கு எதிராக, பள்ளி முதல்வர் சீலன் டீபன் புகார் அளித்துள்ளார்.
இந்த விஷயம் அறிந்த, அந்த ஆசிரியர், தற்போது தலைமறைவாகி விட்டார். போலீசார், அவர் மீது, வழக்குப் பதிவு செய்து, அவரைத் தேடி வருகின்றனர்.
English Summary
Sex torture for the students by PET Master