ராமேஸ்வரம் : சாலையோரம் நின்ற காரில் இருந்து 79 கஞ்சா பார்சல்கள் பறிமுதல்.!
seventy nine kg drugs seized in rameshwaram
ராமேஸ்வரம் : சாலையோரம் நின்ற காரில் இருந்து 79 கஞ்சா பார்சல்கள் பறிமுதல்.!
தமிழகத்தின் கடலோர பகுதியான ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு போதைப்பொருள், கஞ்சா மற்றும் ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் படி தனிப்படை போலீஸார், சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீவிர சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது, ராமேஸ்வரம் கோயிலுக்குச் சொந்தமான வாகன நிறுத்தும் இடத்தில் சந்தேகப்படும் வகையில் கார் ஒன்று நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தது.

அந்தக் காரில் ஜார்க்கண்ட் மாநில பதிவு எண் எழுதப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அந்த காரினுள் ஆயுதம் உள்ளிட்ட வெடிப்பொருட்கள் ஏதாவது இருக்கலாம் என்று நினைத்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் முன்னிலையில் காரின் கதவுகளை உடைத்து பார்த்தனர்.
அப்போது, அந்த காரினுள் 79 கஞ்சா பார்சல்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவற்றை கைப்பற்றி, காரின் உரிமையாளர் மற்றும் கஞ்சாவை கடத்தி வந்தவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
seventy nine kg drugs seized in rameshwaram