தமிழக பட்ஜெட்டில் இடம் பெறும் 7 சிறப்பம்சங்கள் - என்னென்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


கடந்த 12-ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் தொடங்கியது. அன்று நடந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் கடந்த 15-ம் தேதி வரை நடத்தி முடிக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் பதிலுரையும் அளித்தார்.

நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார். இந்த நிலையில், தமிழக பட்ஜெட்டில் ஏழு சிறப்பம்சங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதாவது, ‘மாபெரும் 7 தமிழ்கனவு’ என்ற தலைப்பில் சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நலவாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிபயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் உள்ளிட்ட 7 சிறப்பு அம்சங்கள் இடம்பெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seven special highlightes in tn assembly


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->