மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி.. பதிவிறக்கம் செய்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு!  - Seithipunal
Seithipunal


மூத்த குடிமக்கள் நலனுக்காக மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்து பயன்பெற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுறுத்தல் செய்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மூத்த குடிமக்கள் நலனுக்காக மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் செப்டம்பர்’2023 அன்று தொடங்கி வைக்கப்பட்டது. மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில், மூத்த குடிமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளது.

 குறிப்பாக அருகாமையில் உள்ள முதியோர் இல்லங்கள், மருத்துவமனைகள், மக்கள் மருந்தகம், ஒன்றிய மாநில திட்டங்கள், மாவட்ட சட்ட சேவைகள் ஆணையம் மற்றும் அதிகாரிகள் விவரம், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியம் பற்றிய விவரங்கள், மாற்று மருத்துவ  மருத்துவமனை விவரங்கள் மற்றும் அவர்கள் குறைகள் தெரிவித்திடவும் இந்த மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

மேற்படி மூத்த குடிமக்கள் கைப்பேசி செயலியினை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மூத்த குடிமக்கள் Google Play Store வழியாகவோ அல்லது மூத்த குடிமக்களுக்கான வலைதளமான Seniorcitizen.tnsocialwelfare.tn.gov.in வழியாகவோ பதிவிறக்கம் செய்து பயனடையுமாறு திருவள்ளூர்  மாவட்ட ஆட்சியர் மு. பிரதாப் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senior citizens mobile app Download it District Collector's invitation


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->