மயிலாடுதுறை அருகே பதற்றம்: தமிழக வாழ்வுரிமை கட்சி பிரமுகர் வெட்டிக்கொலை..!
Tamil Nadu Vazhuvrimai Party leader hacked to death near Mayiladuthurai
தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட பொறுப்பாளர் மணிமாறன் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட பா.ம.க., செயலாளர் தேவமணி. 2022-ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முதல் குற்றவாளியான மணிமாறன் மயிலாடுதுறையில் நடைபெற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொண்டு மீண்டும் காரில் காரைக்கால் சென்ற போது இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மணிமாறன் சென்ற கார் செம்பனார்கோவில் தனியார் பள்ளி அருகே சென்ற போது மர்ம நபர்கள் வழிமறித்து காரை சேதப்படுத்தி மணிமாறனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், அவரது தலை சிதைந்த நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார், இறந்த மணிமாறன் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தியுள்ள நிலையில், கொலையாளிகளை பிடிக்க, 05 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் மணிமாறன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் காரைக்கால் மாவட்ட செயலாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Tamil Nadu Vazhuvrimai Party leader hacked to death near Mayiladuthurai