காதல் தோல்வியால் விபரீதம்: இன்ஸ்டாகிராம் நேரலையில் 20 வயது இளைஞர் தூக்கிட்டு தற்கொலை..!
Young man commits suicide on Instagram live due to failed love
காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் ஒருவர் இன்ஸ்டகிராம் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஷாபூர் பகுதியை சேர்ந்த 20 வயதான இளைஞர் ராகுல் அஹிர்வார், இவர் ஷடர்பூர் பகுதியை சேர்ந்த பெண் யூடியூபரை காதலித்துள்ளார். நாளடைவில் காதலர்களுக்கு இடையே மனக்கசப்பு எழுந்துள்ளது. இதனால், ராகுலுடனான காதலை அந்த பெண் முறித்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
காதலியை பிரிந்த சோகத்தில் ராகுல் மனமுடைந்து இருந்துள்ளார். இந்நிலையில், இன்று இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்வதற்கு முன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

'இது எனது கடைசி வீடியோ, எனக்கு வாழ விருப்பமில்லை. நான் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொள்ளப்போகிறேன் வாழ்க்கையில் யாரையும் காதலிக்காதீர்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன் பின்னர் அதேலைவ் வீடியோவில் ராகுல் தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த இந்த வீடியோ வைரளாகியுள்ளது. இதுகுறித்து அறிந்த போலீசார், மற்றும் ராகுலின் நண்பர்கள் அவரது வீட்டிற்கு சென்று பார்த்துள்ளனர். ஆனால், ராகுல் தூக்கில் தொங்கிய படி ராகுல் உயிரிழந்துள்ளார்.
இதையடுத்து அவரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Young man commits suicide on Instagram live due to failed love