மெரினா கடற்கரையில் சேதமடைந்த மாற்றுத்திறனாளிகள் மரப்பாதை மறுசீரமைப்பு: துணை மேயர் நேரில் சென்று ஆய்வு..! - Seithipunal
Seithipunal


கடந்த 2022-ஆம் ஆண்டு சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை திறக்கப்பட்டது.  இந்த மரப்பாதையை ஏராளமான மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி வந்த நிலையில், சமீபத்தில் மரப்பாதை சேதம் அடைந்தது. இதனால் மரப்பாதையை மீண்டும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த முடியாத நிலை உருவானது.

இதனை தொடர்ந்து, மரப்பாதையை சீரமைத்து தர வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து, மரப்பாதையை சீரமைக்கும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது.

குறித்த பணியில் மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மரப்பாதையின் கைப்பிடிகள், உடைந்த பலகைகள் உள்ளிட்டவைகளை அகற்றிவிட்டு புதிதாக பலகைகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 

மரப்பாதை சீரமைப்பு பணிகளை சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், நேரில் ஆய்வு செய்ததோடு, பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், மெரினாவில் நீலக்கொடி கடற்கரை மேம்பாட்டு பணிகளையும் துணை மேயர் பார்வையிட்டுள்ளார். இவருடன் மண்டலக்குழு தலைவர் மதன்மோகன், கவுன்சிலர் மங்கை, சிறப்பு திட்டங்கள்துறை அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் ஆய்வில் கலந்துகொண்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deputy Mayor personally inspects the restoration work of the damaged wooden walkway for the disabled at Marina Beach


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->