இளைஞர் உயிரிழப்பு: கிராம மக்கள் தர்ணா: தடுக்க வந்த போலீசாருக்கு அடி, உதை கொடுத்து விரட்டி அடித்த பெண்கள்..!
Police officers tried to stop villagers from protesting for justice after the death of a young man were beaten and kicked
ராஜஸ்தான் மாநிலம் டோங்கின் ராஜ்மஹால் கிராமத்தில் டிராக்டர் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த கிராம மக்கள் கோபமடைந்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மாவட்டத்தில் உள்ள ராஹ்மஹால் கிராமத்தை சேர்ந்த பப்பு என்ற இளைஞர்,புதன்கிழமை (நேற்று) இரவு டிராக்டர் மோதி உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்து சம்பந்தப்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், உயிரிழந்த பப்புவின் சடலத்துடன் தியோலி-ராஜ்மஹால் சாலையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து அதனை தடுக்க வந்த போலீசாரை அம்மக்கள் கீழே தள்ளி சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதனால் குறித்த போலீசார் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். அத்துடன், இறந்தவரின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர், இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எம்.எல்.ஏ. ராஜேந்திர குர்ஜார், டி.எஸ்.பி. ராம் சிங், தியோலி காவல் நிலைய அதிகாரி தவுலத் ராம் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது கோபமடைந்த கிராம மக்கள் சிலர் போலீசாரை தள்ளிவிட்டு தள்ளுமுள்ளு செய்துள்ளனர். அத்துடன், கான்ஸ்டபிள்களின் தலையை பிடித்து இழுத்து, சரமாரியாக கன்னத்தில் அறைந்து, அவர்களை அடித்து உதைத்தனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. குற்றவாளிகளுக்கு அச்சத்தையும் கொடுக்க வேண்டிய காவல்துறையினர், பொதுமக்களை கண்டு அஞ்சி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
English Summary
Police officers tried to stop villagers from protesting for justice after the death of a young man were beaten and kicked