நிபா வைரஸ் பரவல்: 03 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை: கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடல்: கேரளா அரசு நடவடிக்கை..!
Kerala government issues alert to 03 districts due to Nipah virus outbreak
கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இதனால் 03 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் அங்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், சுகாதார நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டது.
இந் நிலையில் ஜூன் 28-ஆம் தேதி கோட்டக்கல் பகுதியில் நிபா வைரஸ் தொற்றுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டு பின்னர் மூளைச்சாவு அடைந்தார். அவருடன் தொடர்புடைய 100-க்கும் மேற்பட்டோருக்கு தொற்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தற்போது, மலப்புரம் மாவட்டத்தில் பெண் ஒருவர் நிபா வைரஸ் அறிகுறிகளுடன் கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் நிபா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து, கோழிக்கோடு, மலப்புரம், பாலக்காடு ஆகிய 3 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளதோடு, சுகாதார முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. பாலக்காடு மாவட்டத்தில் உள்ள 06 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இங்குள்ள கல்வி நிலையங்கள் தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
Kerala government issues alert to 03 districts due to Nipah virus outbreak