ஆபரேஷன் சிந்தூர்: நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படையின் உறுதிப்பாட்டிற்கு ஒரு சிறந்த உதாரணம்: அமித்ஷா..!
Amit Shah says Operation Sindhu is a great example of the Indian Armys commitment to protecting the countrys sovereignty
மஹாராஷ்டிராவின் புனே நகரில் உள்ள தேசிய பாதுகாப்பு அகாடமியில் நடந்த நிகழ்ச்சியில் மாத்திரை உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது: சுயராஜ்யத்தை பாதுகாக்கும் பொறுப்பு இப்போது 140 கோடி இந்தியர்களிடம் உள்ளது என்றும், சுயராஜ்யத்தை நிலைநாட்ட போராட வேண்டிய நேரம் வந்த போது, நாங்கள் அதை செய்தோம் என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்திய படை தயாராக உள்ளதாகவும், இந்த உறுதிப்பாட்டிற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' ஒரு சிறந்த உதாரணம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தக்க நேரத்தில் எங்களது தலைமையும், படையும் நிரூபித்தது. அத்துடன் அவருக்கு எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும் போதெல்லாம், மஹாராஷ்டிரா மன்னராக விளங்கிய சிவாஜியையும், பேஷ்வா பாஜிராவையும் பற்றி நினைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், மிகவும் பாதகமான சூழல்களுக்கு மத்தியில் அவர்கள், இறையாண்மை மிக்க ஓர் அரசை அவர்கள் இங்கு நிறுவினார்கள் என்றும், அது அவர்களால் முடிந்தது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அதை அவர் நினைத்துப் பார்ப்பதாகவும், பாஜிராவின் சிலையை நிறுவுவதற்கு மிகவும் பொருத்தமான இடம், இந்த தேசிய பாதுகாப்பு அகாடமி என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இங்குதான் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று அமித்ஷா மேலும் பேசியுள்ளார்.
English Summary
Amit Shah says Operation Sindhu is a great example of the Indian Armys commitment to protecting the countrys sovereignty