இமாச்சலப் பிரதேசத்தை வாட்டி வதைத்த பருவமழை...! 69 பேர் பலி, 700 கோடி மதிப்புள்ள கட்டிடங்கள் சேதம்!
Monsoon rains lash Himachal Pradesh 69 people killed buildings worth Rs 700 crore damaged
பருவமழைக் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு,மழை வெள்ளம், மேகவெடிப்பு ஆகியவற்றால் 69 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அம்மாநில முதல்வர் சுக்விந்தர்சிங் சுகு, துரதிஷ்டவசமாக 37 பேரை காணவில்லை. மேலும், இதில் 110 பேர் காயமடைந்துள்ளனர்.

அதுமட்டுமின்றி,ரூ.700 கோடி அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.இதற்கு முன்பாகவே, மழையால் தத்தளித்து வரும் நிலையில், வருகிற 7ஆம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இமாச்சல பிரதேசத்தின் மண்டியிலுள்ள துனாக், பக்சயேத் ஆகியப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் சேதத்தை சந்தித்துள்ளன.இதில் பருவமழை தொடங்கியதிலிருந்து 14 மேகவெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக சாலைகள், குடிநீர் திட்டங்கள், மின்சார வினியோகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பேரிடரால் பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் அரசு நிற்பதாக சுகு உறுதியளித்துள்ளார்.
மேலும், பாதிகப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடத்திற்கு வாடகையாக 5000 வழங்கப்படும். இதில் தேடுதல் மற்றும் மீட்புப் பணி நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
English Summary
Monsoon rains lash Himachal Pradesh 69 people killed buildings worth Rs 700 crore damaged