1 trillion dollar பொருளாதாரம் நமது இலக்கு! மாஸ்டர் பிளான் குறித்து தகவல் வெளியிட்ட முதலமைச்சர்...!
1 trillion dollar economy is our goal Chief Minister announces master plan
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், "தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றவுள்ள 'கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041'ஐ வெளியிட்டுள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது,"#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.
அவ்வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.
எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான - சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது வரவேற்கத்தக்க விதமாக மாறியுள்ளது.
English Summary
1 trillion dollar economy is our goal Chief Minister announces master plan