மொழியின் பெயரால் வன்முறை: சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மஹாராஷ்டிரா முதல்வர் எச்சரிக்கை..!
Maharashtra Chief Minister warns of legal action against violence in the name of language
மஹாராஷ்டிராவில் மராத்தி பேசாத உணவக உரிமையாளரை மஹாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா அமைப்பினர் அடித்து உதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலைக் கண்டித்து கடும் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
இந் நிலையில், மொழியின் பெயரால் யாரும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது என்று அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான செயலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

அத்துடன், நாங்கள் மராத்தி மொழியை மதிக்கிறோம். ஆனால் அதன் பெயரை பயன்படுத்தி வன்முறையில் ஈடுபடுவதை ஏற்க மாட்டோம் என்றும், நாட்டில் எந்த மொழியையும், அவமரியாதை செய்வதை அனுமதிக்கவே முடியாது என்றும் அவர் நிருபர்களிடம் கூறியுள்ளார்.
இப்படி யாராவது வன்முறையில் ஈடுபட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சிலர் ஆங்கிலத்தை உயர்வாகவும், ஹிந்தியை தாழ்வான மொழியாகவும் கருதுகின்றனர். இது எப்படிப்பட்ட மனநிலை என்பது எனக்கு தெரியவில்லை என்றும் பட்னவிஸ் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Maharashtra Chief Minister warns of legal action against violence in the name of language