அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் மீண்டும் நடைமுறை: தமிழக அரசு அறிவிப்பு...! - Seithipunal
Seithipunal


கொரோனா பெரும் தொற்று காலத்தில், நிதி சுமை காரணமாக அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் 01 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு கூடுதலாக ரூ.3,561 கோடி நிதி ஒதுக்கீடு செய்யவுள்ளது. 

இந்த நடைமுறையை 2026 ஏப்ரல் 01 முதல் செயல்படுத்த 2025-26 பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஏப்ரலில் சட்டசபையில் விதி எண் 110ன் கீழ், ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை அக்டோபர் 01-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் 01முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பட்ஜெட்டில் குறிப்பிட்டிருந்த காலத்திற்கு முன்னதாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதன் மூலம், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து, அதற்கான பணப்பலன்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன் பெறவுள்ளனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Earned Leave Surrender for Government Employees and Teachers Reintroduced


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->