பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும்: மல்லிகார்ஜுன கார்கே..!
Mallikarjun Kharge says Congress will continue to fight for reservation for backward classes
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும், அரசியல் சாசனத்தில் இருந்து மதசார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை நீக்க முடியாது என்றும் அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் கார்கே பேசுகையில் குறிப்பிட்டுள்ளதாவது: பிரதமர் மோடியின் வெளியுறவுக் கொள்கை தவறானது. அது எதிரிகளை உருவாக்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிரதமர் இதுவரை 42 வெளிநாடுகளுக்கு சென்னுள்ளார். ஆனால், மக்கள் இறந்து கொண்டிருக்கும் மணிப்பூர் மாநிலத்திற்கு இதுவரை செல்லவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன் அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, சமூக கல்வி வேலைவாய்ப்பு பொருளாதார ரீதியிலான ஜாதிவாரி கணக்கெடுப்பை தெலுங்கானாவில் உள்ள காங்கிரஸ் அரசு செய்து வருகிறது என்றும், இது ஒட்டு மொத்த நாட்டிற்கும் உதாரணமாக மாறியுள்ளது. ஹைதராபாத்தில் ஏராளமான பொதுத்துறை நிறுவனங்களை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது என்றும் அவர் பேசியுள்ளார்.
மேலும், பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என மக்கள் கேட்கின்றனர். ஆனால், எங்கிருந்து 42 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வர முடியும். அதற்கு ஒப்புதல் கிடைக்குமா? என குறிப்பிட்டுள்ளார். அத்துடன், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்க காங்கிரஸ் தொடர்ந்து போராடும் என்றும், அரசியல் சாசனத்தில் இருந்து மதசார்பின்மை, சமூக நீதி ஆகியவற்றை நீக்க முடியாது எனவும் கார்கே கூறியுள்ளார்.
English Summary
Mallikarjun Kharge says Congress will continue to fight for reservation for backward classes