பிரதமர் மோடிக்கு உயரிய விருது வழங்கி கௌரவித்த டிரினிடாட் அண்ட் டொபாகோ குடியரசு..!
The Republic of Trinidad and Tobago honoured Prime Minister Modi with its highest award
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 05 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று கானாவுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு இன்று கரீபியன் தீவு நாடான டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டிற்கு சென்றார்.
அங்கு அவர் அந்நாட்டு பிரதமர் கமலா பிரிசத் பிஸ்சரை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போது இருதரப்பு உறவு மற்றும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடிக்கு டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டின் உயரிய விருதான 'தி ஆர்டர் ஆப் தி டிரினிடாட் அண்டு டொபாகோ குடியரசு விருது' வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை 140 கோடி இந்தியர்களின் சார்பாக ஏற்றுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
English Summary
The Republic of Trinidad and Tobago honoured Prime Minister Modi with its highest award