ஜெய்ப்பூரில் கொடுமையான விபத்து: இறுதிச் சடங்கிற்கு சென்றவர்கள் ஆற்றில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு!
Horrific accident Jaipur 7 people drown river while attending funeral
ராஜஸ்தான், ஜெய்ப்பூர்: கடந்த சனிக்கிழமை, கார் விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கிற்கு பில்வாரா மாவட்ட ஹரித்துவாருக்கு சென்றுவிட்டு திரும்பும் பாதையில் இந்த கொடுமையான விபத்தில் சிக்கினர். இந்த கார் தடுப்புச் சுவரை மோதியவுடன், அது பள்ளத்தாக்கில் விழுந்து ஆற்றில் மூழ்கியது.

இதில் உடனே பலர் உயிரிழந்தனர்.இதைத் தொடர்ந்து,இறந்த 4 பேரின் இறுதிச் சடங்கு புலியா காலா கிராமத்தில் நடந்தது. மேலும், மயானத்தில் இறுதிச் சடங்குகள் முடிந்ததும், மயானத்துக்கு வந்தவர்கள் ஆற்றில் குளிக்க முயன்றனர். அங்கு எதிர்பாராத விதமாக, 7 பேர் அதே நேரத்தில் ஆற்றில் மூழ்கினர்.
அங்கு அருகே இருந்தவர்கள் உடனடியாக உதவி செய்து, 4 பேரை மீட்டனர். அவர்களில் சிலர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் மீதமுள்ள 3 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இதில் இறந்தவர்களின் பெயர்கள்: மகேந்திர மாலி (25), பர்தி சந்த் (34), மகேஷ் சர்மா (35) என அதிகாரிகள் தெரிவித்தனர். உடல்கள் உடனடியாக பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தை அறிந்து, மாவட்ட கலெக்டர் மற்றும் அந்த பகுதியின் எம்.எல்.ஏ. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், அதிகாரிகள், சம்பவத்தின் முழுமையான விசாரணை நடைபெறுவதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே,கிராம மக்கள் மத்தியில் பரபரப்பு நிலவி, “சனிப்பிணம் தனியாகப் போகாது” என்று பழமொழிப் போல், இறுதிச் சடங்கிற்கு சென்றவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தது, மேலும் இறுதிச் சடங்கில் பங்கேற்றவர்கள் கூட தொடர்ச்சியாக விபத்தில் சிக்கியதைப் பற்றியும் பரபரப்பாக பேச்சு நடக்கிறது.
English Summary
Horrific accident Jaipur 7 people drown river while attending funeral