திருச்சியை மிரளவிட்ட தவெக பிரச்சாரம் - நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு.!!
case file against tvk excuetive in trichy
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடந்த 13ம் தேதி திருச்சியில் இருந்து சுற்றுப்பயணத்தைத் தொடங்கினார். இதனால் கூடிய கூட்டம் திருச்சியை குலுங்க வைப்பதாக அமைந்தது. இந்த நிலையில் பிரசாரத்தின் போது, மாநில அரசு மற்றும் தனியார் கடைகளுக்குச் சொந்தமான சொத்துக்களை சேதப்படுத்தியதாக 5 நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சியின் அரியமங்கலம் இளநிலை பொறியாளர் திவாகர் அளித்த புகாரில், டி.வி.எஸ்.டோல்கேட், மேம்பாலத்திற்கு கீழே அழகுபடுத்தப்பட்ட இடத்தை பாதுகாக்க அமைத்திருந்த துருப்பிடிக்காத எக்கு வேலி, விஜய் பேரணியின் போது தொண்டர்களால் சேதப்படுத்தப்பட்டது.
இதன் மூலம் மாநகராட்சிக்கு ரூ.1.4 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல், காந்தி மார்க்கெட் அருகிலுள்ள மரக்கடையில் பிரசாரம் நடைபெற்ற பகுதியிலும், தென்னூரைச் சேர்ந்த வியாபாரி எஸ். ரவிச்சந்திரன் என்பவர், மர தளவாடங்கள் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட ரூ.1.3 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்கள் சேதப்படுத்தியுள்ளனர்" என்றுத் தெரிவித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
case file against tvk excuetive in trichy