தமிழக கோயில்களில் வி.ஐ பி-களுக்கான தரிசனம் படிப்படியாக நிறுத்தப்படும்! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள இந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் சேகர்பாபு தலைமையில் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில் சீர் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டசபை அறிவிப்புகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் "தமிழகத்தில் உள்ள கோயில்கள் முக்கிய பிரமுகர்கள் கருவறை அருகில் சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் முறை படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் ரூ.20 கட்டண தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருத்தணி ஆடி கிருத்திகை திருவிழாவின்போதும், திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவின்போதும் விஐபிகள் தரிசனம் நிறுத்தப்பட்டது. 

இதேபோன்று தமிழகத்தில் உள்ள பிற கோயில்களிலும் விஐபி தரிசனம் செய்யும் நடைமுறை படிப்படியாக குறைக்கப்படும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் இந்து சமய அறநிலைத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன், ஆணையர் குமரகுருபவன், கூடுதல் ஆணையர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sekarbabu announced Darshan for VIPs in Tamil Nadu temples will be phased out


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->