விக்கிரவாண்டியில் விதைத்த விதை... இனி ஆட்டம் ஆரம்பம்..! கொள்கையை செயலாக மாற்றும் விஜய்...! - த.வெ.க அதிரடி
seed sown Vikravandi Now game begins Vijay turn policy into action Tvk action
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், விஜய் அவர்களின் அரசியல் அணுகுமுறையும், கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் குறித்து விரிவாக விளக்கப்பட்டுள்ளது.அந்த பதிவில், “சொன்னதை செயலால் நிரூபிப்பவர் தான் தலைவர் விஜய்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், ஒரே கட்சியின் கைகளில் முழு அதிகாரமும் குவியும் அரசியல் நடைமுறையை மாற்றி, மக்களாட்சியின் உண்மையான வடிவத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தலுக்கு முன்பே தங்களுடன் இணைந்து பயணிக்க விரும்பும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதையும், ஆட்சியில் சம பங்களிப்பும் வழங்கப்படும் என விஜய் உறுதியளித்திருந்தார் என்றும், தற்போது அந்த வாக்குறுதிகளை நடைமுறை அரசியலில் படிப்படியாக நிறைவேற்றி வருகிறார் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிகாரம் ஒரே மையத்தில் தேங்கிக் கிடக்காமல், அடிமட்ட தொண்டர்களிலிருந்து கூட்டணி கட்சிகள் வரை பரவலாக பகிரப்பட்டிருக்க வேண்டும் என்பதே தலைவர் விஜயின் அரசியல் சிந்தனை எனவும், அதனை செயலாக்கும் முயற்சிகள் தற்போது வேகமெடுத்து வருகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநாட்டு மேடையில் லட்சக்கணக்கான மக்கள் முன்னிலையில் வழங்கிய வாக்குறுதிகளை, அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளின் மூலம் விஜய் தொடர்ந்து பிரதிபலித்து வருவதாகவும், “சொல்வது ஒன்று செய்வது ஒன்று” என்ற அரசியல் பாணியை முறியடித்து, “சொன்னதைச் செய்வார், செய்வதையே சொல்வார்” என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்கியுள்ளதாகவும் அந்த பதிவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி மாநாட்டில் விதைக்கப்பட்ட “ஆட்சியில் பங்கு” என்ற கொள்கை விதை, தற்போது நடைமுறை அரசியல் செயல்பாடாக மாறி வருவதாகவும், இது எதிர்கால தமிழக அரசியலின் திசையை மாற்றக்கூடிய புரட்சிகர அரசியல் நகர்வாக அமையும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் தனது பதிவில் தெரிவித்துள்ளது.
English Summary
seed sown Vikravandi Now game begins Vijay turn policy into action Tvk action