அவதூறு பேச்சு வழக்கு - நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


அவதூறு பேச்சு வழக்கு - நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு.!

கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மேனகா நவநீதனுக்கு ஆதரவு தெரிவித்து பிப்ரவரி மாதம் 13-ந் தேதி ஈரோடு திருநகர்காலனியில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசியபோது அவர் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறித்தும், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்தும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு அரசியல் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், இது தொடர்பாக சீமான் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட மொத்தம் நான்கு பிரிவுகளின் கீழ் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதி முருகேசன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது சீமான் தரப்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், சீமானுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள இருப்பதால், அவரால் ஆஜராக முடியவில்லை என்று விளக்கம் அளித்தார். அதன் பின்னர் நீதிபதி முருகேசன் இந்த வழக்கு விசாரணையை வருகிற 30-ந் தேதிக்கு ஒத்தி வைத்து, அன்றைய தினம் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

seaman appear in erode court on coming 30th court order


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->