நாகையில் ரூ.21 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்..!! - Seithipunal
Seithipunal


நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடல் அட்டைகள் கடத்தப்படுவதாக கடலோர காவல் படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கடலோர காவல் குழும ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் நாகப்பட்டினம் கீரை கொள்ளை பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்பொழுது அங்குள்ள ஒரு குடோனில் 700 கிலோ எடையுள்ள சுமார் ரூ.21 லட்சம் மதிப்பிலான கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் நாகப்பட்டினம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த முருகானந்தம் என்பவருக்கு சொந்தமான குடோன் என்பதை கண்டறிந்தனர். 

இந்த நிலையில் குடோன் உரிமையாளர் முருகானந்தம் தலைமறைவாக உள்ளார். கடல் அட்டை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தொடர்பாக வழக்கு பதிவு செய்த கடலோர காவல் படை போலீசார் தலைமறைவாக உள்ள முருகானந்தத்தை தேடி வருகின்றனர். காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் நாகை வனசரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sea cucumber worth Rs21 lakh seized in Nagapattinam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->