கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!!
Schools closed tomorrow due to heavy rain in kanniyakumari
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலம் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

அதன்படி இன்றும் நாளையும் கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், விருதுநகர், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டு உள்ளார்.
English Summary
Schools closed tomorrow due to heavy rain in kanniyakumari