#BREAKING : பள்ளி மாணவர்கள் கைகளில் கயிறு கட்ட கூடாது - சமூக பாதுகாப்புத் துறை உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் அனைத்து தரப்பினரும் கல்வி கற்பதற்கு ஏதுவாக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் நிலையில் பள்ளி மாணவர்கள் சாதி மோதல்களில் ஈடுபடுவது அவ்வப்போது செய்தியாகி வருகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பல வண்ணங்களில் கைகளில் கயிறு அணிந்து தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துவதாகவும், அதன் மூலம் பல ஜாதி குழுக்களாக மாணவர்கள் பிரிந்து உணவு இடைவேளையின் பொழுதும் விளையாடும் நேரத்திலும் பள்ளி நேரத்தின் போதும் அனைவரோடும் கலந்து பழகாத சூழல் நிலவுவதாக தெரியவந்துள்ளது.

எனவே, மாணவர்களின் நலனை கருதி, ஜாதியை வெளிப்படுத்தும் கயிறு அணிவதை தடுக்கும் நோக்கத்தில் பள்ளி மாணவர்கள் இனி கைகளில் கயிறு கட்டக் கூடாது என்று சமூக பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் மாணவர்கள் கயிறு கட்டக் கூடாது, கம்மல், செயின், காப்பு போன்றவற்றை அணிய தடை, பிறந்த நாளாக இருந்தாலும் சீருடையில்தான் வர வேண்டும் என பள்ளி மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்து சமூக பாதுகாப்புத் துறை உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School students should not tie ropes on their hands


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->