மரத்தடியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடந்தது என்ன?
school student study under the tree in vilupuram for no clasroom
மரத்தடியில் பாடம் கற்கும் அரசு பள்ளி மாணவர்கள் - நடந்தது என்ன?
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குண்டலப்புலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அரசு நடுநிலைப் பள்ளி கடந்த 6 வருடங்களுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்தப் பள்ளியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இருப்பினும், இந்த பள்ளியில் இதுவரையிலும் உயர்நிலைப்பள்ளிக்கான கூடுதல் கட்டிட வசதியை கல்வித்துறை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. இதனால், 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையும், 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையும் தனி கட்டிடங்களாக பிரித்து அங்குள்ள 4 கட்டிடங்களில் 10 வகுப்பறைகளும் சேர்ந்து இயங்கி வருகின்றன.

ஆனால், இந்த வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. பல சமயங்களில் ஒன்பதாம் வகுப்பு மாணவ- மாணவிகள் பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தடி நிழலில் அமர்ந்து கல்வி பயிலும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். தற்போது மழைக்காலம் என்பதால் சில நாட்களாக அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக மாணவர்கள் அமர வைக்கப்பட்டு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக அப்பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம், இந்த விஷயத்தில் தலையிட்டு குண்டலப்புலியூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளின் சிரமத்தை போக்கிடும் வகையில் அப்பள்ளிக்கு கூடுதல் கட்டிட வசதியை விரைந்து கட்டித்தருவதோடு, அங்கு போதுமான அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
school student study under the tree in vilupuram for no clasroom