திருச்சியில் பரிதாபம் - குளிக்கச் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவி.! பிணமாக மீட்பு.! - Seithipunal
Seithipunal


திருச்சியில் பரிதாபம் - குளிக்கச் சென்ற 7 ஆம் வகுப்பு மாணவி.! பிணமாக மீட்பு.!

திருச்சி மாவட்டத்தில் உள்ள வையம்பட்டி அடுத்த கடப்பமரத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மலைச்சாமி மகள் விஸ்வஜோதி. பூலாம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டின் பக்கத்தில் உள்ள குளத்தில் குளிப்பதற்காக விஸ்வஜோதி, அவரது சகோதரி மகரஜோதி, தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் உள்ளிட்டோருடன் சென்றார்.

அங்கு அனைவரும் குளத்தில் இறங்கி உற்சாகமாக விளையாடியவாறு குளித்துக் கொண்டிருந்தபோது விஸ்வஜோதி, தேவதர்ஷினி, ரவி பிரகாஷ் உள்ளிட்டோர் குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது மூவரும் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கினர். 

இதைப்பார்த்த அதே பகுதியைச் சேர்ந்த பழனிவேல்ராஜ் மகன் சபரீஸ்வரன் குளத்துக்குள் இறங்கிச் சென்று தேவதர்ஷினி, மகர ஜோதி, ரவி பிரகாஷ் உள்ளிட்டோரை குளத்தில் இறங்கி வெளியே இழுத்து வந்து காப்பாற்றினார்.

ஆனால், அதற்குள் சிறுமி விஸ்வஜோதி தண்ணீரில் முழுவதுமாக மூழ்கினார். உடனே சபரீஸ்வரன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குளத்தில் மூழ்கிய விஸ்வஜோதியை பிணமாக மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி மாணவி உயிரிழந்த சோகம் ஒரு புறம் இருக்க சிறுவன் ஒருவன் மூன்று பேரை உயிருடன் மீட்டதால் அவரை அப்பகுதி கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர். சரியான நேரத்தில் இந்த மாணவன் இல்லாவிட்டால் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்திருக்கக் கூடும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

school student died drowned water in trichy


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->