இடிந்து விழுந்த சமையலறையின் மேற்கூரை - தலைமை ஆசிரியையால் உயிர் தப்பிய சமையலர்.! - Seithipunal
Seithipunal


இடிந்து விழுந்த சமையலறையின் மேற்கூரை - தலைமை ஆசிரியையால் உயிர் தப்பிய சமையலர்.!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டு பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. பதினாறு மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில், இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியில், நேற்று மாணவர்களுக்கு மதிய உணவிற்காக சமையலர் கலா என்பவர் உணவு தயார் செய்து கொண்டிருந்தார்.

அப்போது, அவர் தலைமை ஆசிரியை அழைத்ததால் சமையலறையை விட்டு வெளியே வந்தார். அந்த நேரம் பார்த்து சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இதில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன. சரியான நேரத்தில் கலா வெளியில் வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

1976ம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் பள்ளி கட்டடம் பழுதடைந்ததால் சமீபத்தில் இடிக்கப்பட்டு அருகில் உள்ள சமுதாய கூடத்தில் பள்ளி இயங்கி வருகிறது. ஆனால் சமையலறை கூடம் பழைய கட்டிடத்திலேயே செயல்படுகிறது. 

பல ஆண்டுகளாக சேதமடைந்த இந்த கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என்று நகராட்சி கூட்டத்தில் கிராம மக்கள் புகார் தெரிவித்தும் அலட்சியம் காட்டி வந்ததாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், இந்தப் பள்ளியில் குடிநீர், கழிவறை, போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவர்கள் அவதிக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகிறது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

School kitchen roof brole in seerkazhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->