கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை.!
School holiday in Thoothukudi district due to heavy rain
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ஆம் தேதி ஒட்டி துவங்கக்கூடும் என்றும், தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியும், சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்நிலையில், தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
School holiday in Thoothukudi district due to heavy rain