'இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகு அமெரிக்கா செய்ததையே நாங்கள் செய்தோம்': கத்தார் மீதான தாக்குதலை குறித்து இஸ்ரேல் பிரதமர் விளக்கம்..!
Israeli Prime Minister explains attack on Qatar saying we did what America did after the Twin Towers attack
காசாவில் ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் கத்தாரில் ஹமாஸ் அமைப்பின் உயர் அரசியல் தலைவர்கள் வசிப்பிடத்தை குறிவைத்து இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதல் நடத்தியத்தில், கலில் அய் ஹய்யா என்ற மூத்த தலைவரின் மகன் உட்பட 05 பேர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதன் போது கத்தார் தரப்பில், பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்ததால் அந்நாடு 'இஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடு' என்ற கடுமையாக விமர்சித்துள்ளது. குறித்த தாக்குதலுக்கு ஜோர்டான், சவுதி உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீடியோ ஒன்று வெளியிட்டு கூறியுள்ளதாவது: அமெரிக்கா, அல்கொய்தா பயங்கரவாதிகளை தேடி ஆப்கானிஸ்தான் சென்று, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த பயங்கரவாதி ஒசாமா பின்லாடனை கொன்றதை போல் நாங்களும் செய்துள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், பல்வேறு நாட்டு தலைவர்கள் தற்போது இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர். இதற்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானில் ஒசாமா பின்லாடனை அமெரிக்கா கொன்ற பிறகு அவர்கள் என்ன சொன்னார்கள்? பாகிஸ்தானுக்கு என்ன ஒரு பயங்கரமான விஷயம் செய்யப்பட்டது என சொன்னார்களா..? இல்லையே அவர்கள் பாராட்டினார்கள் என்று தெரிவித்துள்ளதோடு, அதே கொள்கைக்காக நின்று அதனை செயல்படுத்தும் இஸ்ரேலை அவர்கள் பாராட்ட வேண்டும் என்று அந்த வீடியோவில் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Israeli Prime Minister explains attack on Qatar saying we did what America did after the Twin Towers attack