நடிகர் சங்கத்திற்கு தேர்தல் ஏன் நடத்தவில்லை...நடத்துவதில் என்ன சிக்கல்? - ஐகோர்ட் எழுப்பிய கேள்வி! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தேர்தல் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2022ல் நடைபெற்ற தேர்தலின் அடிப்படையில் கடந்த மார்ச் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனால், 2024 செப்டம்பர் 8-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், தற்போதைய நிர்வாகிகளின் பதவிக்காலத்தை மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை எதிர்த்து நடிகர் நம்பிராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். தனது மனுவில், பதவிக்கால நீட்டிப்பு சட்ட விரோதம் என்றும், புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க உயர் நீதிமன்ற நீதிபதியை ஆணையராக நியமித்து தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது “நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிக்கல் உள்ளது?” என உயர் நீதிமன்றம் நேரடியாக கேள்வி எழுப்பியது.

இதற்கு நடிகர் சங்க தரப்பில்,தற்போது புதிய கட்டடம் கட்டும் பணிகள் 25 கோடி செலவில் நடைபெறுகின்றன.ஏற்கனவே 60% வேலைகள் முடிந்துள்ளன.இந்நிலையில் தேர்தல் நடத்தினால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்படும்.என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும்,பொதுக்குழு, செயற்குழு கூட்டங்களில் ஒருமனதாக பதவிக்கால நீட்டிப்பு நிறைவேற்றப்பட்டதாகவும்,300 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட ஆவணங்கள் பதிவுத்துறையில் தாக்கல் செய்யப்பட்டதாகவும்,இதுவே ஜனநாயக அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு எனவும்,நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தாக்கல் செய்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் வரும் 15 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.நடிகர் சங்க தேர்தல் விவகாரம் நீதிமன்றத்தில் நீண்டு கொண்டே போவது, சங்கத்திற்குள்ளேயே மேலும் பதற்றத்தை ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Why wasnot the election held for the Actors Union What the problem with holding it The question raised by the High Court


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->