மலையாள சினிமாவில் வெடித்த லோகா...! 200 கோடி கிளப்பில் குதித்தது! - Seithipunal
Seithipunal


துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளிவந்த ‘லோகா’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு ரசிகர்களிடம் அறிமுகமானது.

இப்படத்தில் ‘பிரேமலு’ புகழ் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, அவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன், சாந்தி பாலசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மேலும், டொமினிக் அருண் எழுதி இயக்கிய இப்படம், மர்மங்கள் நிறைந்த கதை, கல்யாணியின் கவர்ச்சியான நடிப்பு மற்றும் புதுமையான காட்சிப்பதிவு ஆகியவற்றால் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

அதுமட்டுமின்றி,ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், ரசிகர்களின் வலுவான ஆதரவால் திரையிடப்படும் திரைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், ‘லோகா’ பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. மேலும், உலகளவில் ரூ. 202 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ‘லோகா’ மலையாள திரையுலகின் ரூ.200 கோடி வசூலை எட்டிய 4-வது படமாக சரித்திரம் படைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lokah exploded in Malayalam cinema entered 200 crore club


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->