தணல் விழாவில் அதர்வா ஓபன் டாக்...! அதர்வாவின் திருமண பஞ்ச்...! - Seithipunal
Seithipunal


ஜான் பீட்டர் தயாரித்து ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா, அஷ்வின், லாவண்யா திரிபாதி நடித்துள்ள ‘தணல்' படம் விரைவில் வெளியாகிறது.சென்னையில் நடந்த பட விழாவில் அதர்வா பேசும்போது, “இதுவரை சாக்லேட் பாயாக நடித்தேன் என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை.

எனது 2-வது படமே ஆக்‌ஷன் படம் தான். சிறுவயதில் இருந்தே ஆக்‌ஷன் கதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ரசித்து அந்த வகை கதாபாத்திரங்களை செய்கிறேன்'' என்று தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து ‘முரட்டுக்காளையாக சுற்றிய விஷாலுக்கு திருமணமாக போகிறது. உங்களுக்கு எப்போது திருமணம்?' என்று கேட்கப்பட்டது. அதற்கு அதர்வா, “விஷால் எப்போது திருமணம் செய்துகொள்கிறாரோ, அதன்பிறகு தான் நான் திருமணம் செய்துகொள்வேன்'' என்று சிரித்தபடி பதிலளித்தார்.

மேலும், நடிகர் விஷால் 48 வயதாகும் நிலையில், அண்மையில் தான் நடிகை சாய் தன்ஷிகாவை நிச்சயதார்த்தம் செய்தார். நடிகர் சங்க கட்டிடம் பணிகள் நிறைவடைந்ததும் சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Atharvaas open talk Thanal festival Atharvaas wedding punch


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->