ஆசிய கோப்பை: அவர்களது போட்டியை ரத்து செய்ய முடியாது -உச்சநீதிமன்றம் அதிரடி!
Asia Cup Supreme Court shockingly states that their match cannot be canceled
ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்ட படி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் நீதிபதி தீர்ப்பளித்துள்ளனர்.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடக்க இருந்த இந்த போட்டி பாகிஸ்தான் அணி வருவதில் எழுந்த சிக்கல் காரணமாக அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. தற்போது இந்த போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரக அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன.லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெறும். அதில் இருந்து இரு அணி இறுதிப்போட்டிக்கு தேர்வாகும்.
இதில் கிரிக்கெட் ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாக்கி இருக்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் 14-ம் தேதி நடைபெற உள்ளது. ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு இந்தியா- பாகிஸ்தான் நேருக்கு நேர் மோத இருப்பதால் இந்த ஆட்டம் கவனிக்கத்தக்க ஒன்றாக அமைந்துள்ளது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் போட்டியை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளனர். போட்டி வரும் ஞாயிற்றுகிழமை அன்று நடைபெற உள்ள நிலையில் இதனை அவசர வழக்காக எடுத்து கொண்டு நாளையே விசாரிக்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த போட்டியை ரத்து செய்ய முடியாது திட்டமிட்ட படி நடைபெறும் என்று தீர்ப்பளித்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க முடியாது எனவும் கூறியுள்ளனர்.
English Summary
Asia Cup Supreme Court shockingly states that their match cannot be canceled