பராசக்தியின் வில்லன்..! ரவி மோகனின் 45வது பிறந்தநாளில் சுதா கொங்கராவின் ஸ்பெஷல் வாழ்த்து...!
Parasakthis villain Sudha Kongaras special wishes Ravi Mohans 45th birthday
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன், தற்போது கணேஷ் கே.பாபு இயக்கத்தில் ‘கராத்தே பாபு’ படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். அதே சமயத்தில், சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும், ரவி மோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் ஒரே நேரத்தில் 3 புதிய திரைப்படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் முதல் படமாக கார்த்திக் யோகி இயக்கத்தில் ரவி மோகன் கதாநாயகனாக நடிக்கும் படம், 2 -வதாக யோகி பாபு மூலம் ஒரு புதிய படம் தயாரிக்கப்பட இருக்கிறது.
இந்நிலையில், இன்று நடிகர் ரவி மோகன் தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.இவருக்கு திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
அதிலும், குறிப்பாக ‘பராசக்தி’ பட இயக்குனர் சுதா கொங்கரா, தனது சமூக வலைத்தளத்தில் ரவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் புகைப்படத்துடன், “படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியான இடத்தைத் தேடுங்கள், அங்கே ரவி இருப்பார், தயாராகி, பதற்றமின்றி, கதாபாத்திரத்திலும் காட்சியிலும் 200 சதவீதம் ஈடுபடுவதைக் காண்பீர்கள்! என் அழகான ஜென்டில்மேன் நடிகரே, உங்களுடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!! பிறந்தநாள் வாழ்த்துகள்!” என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Parasakthis villain Sudha Kongaras special wishes Ravi Mohans 45th birthday