60 கோடி மோசடி வழக்கில் சிக்கிய ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா...! – விசாரணைக்கு சம்மன் - Seithipunal
Seithipunal


மும்பை ஜூகுவை சேர்ந்த 60 வயதான தொழில் அதிபர் தீபக் கோத்தாரியிடம், நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ரா, தங்களின் பெஸ்ட் டீல் டிவி சேனலில் முதலீடு செய்யுமாறு ரூ.60 கோடியே 48 லட்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆனால், பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதாக தொழில் அதிபர் அளித்த புகாரின் பேரில், கடந்த மாதம் ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ரா உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் பிறகு வழக்கு பொருளாதார குற்றப்பிரிவிற்கு மாற்றப்பட்டு, கடந்த வாரம் இருவருக்கும் எதிராக ‘லுக் அவுட் நோட்டீஸ்’ பிறப்பிக்கப்பட்டது.

இதனிடையே, தற்போது ராஜ் குந்த்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இது வரும் 15-ஆம் தேதி அவர், பொருளாதார குற்றப்பிரிவு காவலில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shilpa Shetty Raj Kundra caught in Rs 60 crore fraud case Summoned


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->