தோனி கிரிக்கெட் மைதானத்தை விட்டு ஸ்க்ரீனுக்கே வருகிறாரா...? ‘தி சேஸ்’ டீசர் அதிர்ச்சி...!
Is Dhoni leaving cricket field and coming screen The Chase teaser shocking
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரா சிங் தோனி, கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றாலும் ரசிகர்கள் இதுவரை உலகமெங்கும் அவரை மறக்கவில்லை.
இவர் தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தோனி, நடிகராக களமிறங்குவாரா...? என்ற கேள்வியை தற்போது எழுப்பியுள்ளது.

ஏனெனில்,தோனியின் மனைவி சாக்ஷி நிறுவிய ‘டோனி என்டெர்டெயின்மென்ட்’ நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா நடிக்கும் ‘எல்.ஜி.எம்.’ படத்தை தயாரித்துள்ளது.
அதே நேரத்தில், நடிகர் மாதவனுடன் தோனியும் துப்பாக்கி ஏந்திய வீரர்களாக நடித்துள்ள ‘தி சேஸ்’ படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
அதிலும், குறிப்பாக இது விளம்பர டிரெய்லர் அல்லது ஆவணப்படமாக இருக்கலாம் என்று விமர்சனங்கள் எழுந்தாலும், தோனி பாலிவுட் திரையுலகில்,கால்பதிக்கத் தயார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், வசன் பாலா இயக்கும் இந்த புதிய படத்தின் அடுத்த கட்ட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தோனி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
English Summary
Is Dhoni leaving cricket field and coming screen The Chase teaser shocking