'இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான்'; முதல்வர் பேச்சு..!
The Chief Minister stated that Tamil Nadu is the safest state for women in India
தஞ்சையில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: தஞ்சை மண் திராவிட இயக்கத்தின் கோட்டை எனவும், திமுக மகளிரணியினர் ராணுவப் படையை போல திரண்டுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ராஜராஜ சோழன் ஆட்சி செய்த சோழர்களின் மண் தஞ்சை. பெரிய கோயிலும், கல்லணையும் நிலைத்து நிற்கும் மண் இது என்று தஞ்சையின் பெருமையை சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கலைஞர் மட்டுமல்ல நானும் டெல்டாக்காரன் தான் என்று குறிப்பிட்டதோடு, பெண் விடுதலைக்காக வாழ்நாள் முழுவதும் உழைத்தார் பெரியார். பெண்கள் கேட்காமல் அவர்களின் தேவைகளை நிறைவேற்றும் ஆட்சி திராவிட மாடல் ஆட்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெண்கள்தான் எப்போதும் பவர் ஹவுஸாக இருக்கிறார்கள் என்றும், அரசின் திட்டங்களை பரப்புரை செய்யும் பணிகளை பெண்களிடம் தான் ஒப்படைத்துள்ளோம் என்று கூறியுள்ளார். மேலும், தேர்தல் பரப்புரையின் முன்கள வீராங்கனைகளாக மகளிரணியினர் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என கூச்சமில்லாமல் பிரதமர் பொய் பேசி சென்றுள்ளார் என்று கூறியுள்ளதோடு, இந்தியாவிலேயே பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடுதான் எனவும் தனது உறையும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
English Summary
The Chief Minister stated that Tamil Nadu is the safest state for women in India