அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம்: வாலிபர் எடுத்த கொடூர முடிவு.. ஆடியோவில் உருக்கம்! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி அருகே காதல் தோல்வியால் விரக்தியடைந்த வாலிபர் ஒருவர் தனது நண்பருக்கு வாட்ஸ்-அப் மூலம் உருக்கமான ஆடியோ ஒன்றை அனுப்பி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வள்ளுவர்நகர் 3-வது தெருவை சேர்ந்த சக்தி கணேஷ் அதேபகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த பெண் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேறொருவரை திருமணம் முடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கடும் விரக்த்தியில்  இருந்து வந்த சக்தி கணேஷ் வேலைக்கு சரிவர செல்லாமல்  அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தனது நண்பரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அவர் போனை எடுக்கவில்லை. 

இதனால் அவருக்கு சக்திகணேஷ் வாட்ஸ்-அப் மூலம் ஆடியோவாக பேசி அனுப்பியுள்ளார். அதில் ‘‘அடுத்த ஜென்மம் என்று ஒன்று இருந்தால் பார்ப்போம்.  எல்லாம் முடிந்துவிட்டது, அவ்வளவுதான்.

நீ காலையில் போனை எடுத்து பார்க்கும்போது தனியார் கல்லூரி அருகே உள்ள தண்டவாளத்தில் இருப்பேன். என்னை வந்து பார்’’ என்று உருக்கமாக ஆடியோவில் பேசியுள்ளார்.  இதையடுத்து சக்தி கணேஷ் கோவில்பட்டி அருகே உள்ள பெத்தேல் ரெயில்வே கேட் அருகில் உள்ள தண்டவாளப்பகுதிக்கு சென்றுஅந்த வழியாக வந்த ரெயில் முன் திடீரென பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையே சக்தி கணேசின் நண்பர் காலையில் செல்போனை எடுத்து பார்த்தபோதுதான், அவர் அனுப்பிய உருக்கமான ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lets see if there is a next life the young man's terrible decision a twist in the audio


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->